எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி ஜோடி பாடல்கள்

பாடல்: ஆயிரம் தாமரை மொட்டுக்களே
திரைப்படம்: அலைகள் ஓய்வதில்லை
இசை: இளையராஜா




ஆயிரம் தாமரை மொட்டுக்களே
வந்து ஆனந்த கும்மிகள் கொட்டுங்களே
ஆயிரம்
தாமரை மொட்டுக்களே
வந்து ஆனந்த கும்மிகள் கொட்டுங்களே


இங்கு ரெண்டு ஜாதி மல்லிகை
தொட்டுக்கொள்ளும் காமன் பண்டிகை
கோவிலினில் காதல் தொழுகை
ஆயிரம்
தாமரை மொட்டுக்களே
வந்து ஆனந்த கும்மிகள் கொட்டுங்களே

...ஓஓ ஓஓஓ ஓஓ கொத்து மலரே
அமுதம் கொட்டும் மலரே
இங்கு தேனை ஊற்று
இது தீயின் ஊற்று

...ஆஆ ஆஆஆ ஆஆ கொத்து மலரே
அமுதம் கொட்டும் மலரே
இங்கு தேனை ஊற்று இது தீயின் ஊற்று

உள்ளிருக்கும் வேர்வை வந்து நீர் வார்க்கும்
புல்லரிக்கும் மேனி எங்கும் பூ பூக்கும்
அடிக்கடி தாகம் வந்து ஆளைக் குடிக்கும்


ஆயிரம் தாமரை மொட்டுக்களே
வந்து ஆனந்த கும்மிகள் கொட்டுங்களே
ஆயிரம் தாமரை மொட்டுக்களே
வந்து ஆனந்த கும்மிகள் கொட்டுங்களே

...ஏஏ ஏஏஏ ஏஏ வீட்டுக்கிளியே
கூண்டை விட்டுத்தாண்டி வந்தியே
ஒரு காதல் பாரம் இரு தோளில் ஏறும்


புல்வெளியின் மீது ரெண்டு பூமாலை
ஒன்றை ஒன்று சூடும் இது பொன்மேடை
கள்வடியும் பூக்கள் தங்கள் காம்பை மறக்கும்


ஆயிரம் தாமரை...ன ன ன ன
ஆயிரம் தாமரை...னன னன னன னன னன
ஆயிரம் தாமரை மொட்டுக்களே
வந்து ஆனந்த கும்மிகள் கொட்டுங்களே


இங்கு ரெண்டு ஜாதி மல்லிகை
தொட்டுக்கொள்ளும் காமன் பண்டிகை
கோவிலினில் காதல் தொழுகை
ஆயிரம் தாமரை மொட்டுக்களே
வந்து ஆனந்த கும்மிகள் கொட்டுங்களே

--------------------------------------------------------------------------------------------------------

பாடல்: அதிகாலை நேரமே
திரைப்படம்: மீண்டும் ஒரு காதல் கதை
இசை: இளையராஜா




அதிகாலை நேரமே புதிதான ராகமே
எங்கெங்கிலும்...ஆலாபனை
கூடாத நெஞ்சம் ரெண்டும் கூடுதே பாடுதே

அதிகாலை நேரமே புதிதான ராகமே
எங்கெங்கிலும்...ஆலாபனை
கூடாத நெஞ்சம் ரெண்டும் கூடுதே பாடுதே

காற்றோடு மோதும் ஆனந்த ராகம் தாலாட்டுது
காவேரி நீர் அலை அது கடலோடு ஒன்று சேர்ந்தது
காவேரி நீர் அலை அது கடலோடு ஒன்று சேர்ந்தது
புது சங்கமம்...சுகம் எங்கிலும்
என்றேன்றும் நீயும் நானும் சேர்வதே ஆனந்தம்

அதிகாலை நேரமே புதிதான ராகமே
எங்கெங்கிலும்...ஆலாபனை
கூடாத நெஞ்சம் ரெண்டும் கூடுதே பாடுதே

உன்னோடு நானும் என்னோடு நீயும் உறவாடலாம்
நெஞ்சோடு ஊர்வலம் வர நீங்காமல் நாம் சுகம் பெற
நெஞ்சோடு ஊர்வலம் வர நீங்காமல் நாம் சுகம் பெற
தோளோடு தான்...தோள் சேரவே
தூங்காமல் காணும் இன்பம் வாவெனும் நேரமே

அதிகாலை நேரமே புதிதான ராகமே
எங்கெங்கிலும்...ஆலாபனை
கூடாத நெஞ்சம் ரெண்டும் கூடுதே பாடுதே

--------------------------------------------------------------------------------------------------------

பாடல்: மீண்டும் மீண்டும் வா
திரைப்படம்: விக்ரம்
இசை: இளையராஜா




மீண்டும் மீண்டும் வா வேண்டும் வேண்டும் வா
மீண்டும் மீண்டும் வா வேண்டும் வேண்டும் வா
பால் நிலா ராத்திரி பாவை ஓர் மாதிரி
அழகு ஏராளம் அதிலும் தாராளம்
மீண்டும் மீண்டும் வா வேண்டும் வேண்டும் வா
மீண்டும் மீண்டும் வா வேண்டும் வேண்டும் வா

ஆண்மை என்னும் வார்த்தைக்கேற்ற தோற்றம் நீதானா
தேக்கு மரத்தில் ஆக்கி வைத்த தேகம் இதுதானா
செந்நிறம் பசும்பொன் நிறம் தேவதை வம்சமோ
சேயிடை விரல் தீண்டினால் சந்திரன் அம்சமோ
தொடங்க மெல்லத் தொடங்க வழங்க அள்ளி வழங்க
இந்த போதைதான் இன்ப கீதைதான் அம்மம்மா


மீண்டும் மீண்டும் வா வேண்டும் வேண்டும் வா
மீண்டும் மீண்டும் வா வேண்டும் வேண்டும் வா

விரகம் போலே உயிரை வாட்டும் நரகம் வேறேது
சரசக்கலையை பழகிப்பார்த்தால் விரசம் கிடையாது
தேன் தரும் தங்க பாத்திரம் நீ தொட மாத்திரம்
ராத்திரி நடு ராத்திரி பார்க்குமோ சாத்திரம்
கவிதை கட்டில் கவிதை எழுது அந்திப்பொழுது
கொஞ்சும் பாடல்தான் கொஞ்சம் ஊடல்தான் அம்மம்மா ஹா


மீண்டும் மீண்டும் வா வேண்டும் வேண்டும் வா
மீண்டும் மீண்டும் வா வேண்டும் வேண்டும் வா
பால் நிலா ராத்திரி பாவை ஓர் மாதிரி
அழகு ஏராளம் அதிலும் தாராளம்
அழகு ஏராளம் அதிலும் தாராளம்


--------------------------------------------------------------------------------------------------------


பாடல்: வனிதாமணி வனமோகினி
திரைப்படம்: விக்ரம்
இசை: இளையராஜா



கண்ணே ம்ம் தொட்டுக்கவா கட்டிக்கவா
ம்ஹ்ம் கட்டிக்கி்ட்டு ஒட்டிக்கவா
தொட்டுக்கிட்டா பத்திக்குமே பத்திக்கிட்டா பத்தட்டுமே
ம்ம்ம் அஞ்சுகமே நெஞ்சு என்ன விட்டு விட்டு துடிக்குது
கட்டழகி உன்னை எண்ணி கண்ணு முழி பிதுங்குது
கொத்திவிட வேண்டுமென்று கொக்கு என்ன துடிக்குது
தப்பிவிட வேண்டுமென்று கெண்டை மீனு தவிக்குது
குளிக்கிற மீனுக்கு குளிரென்ன அடிக்குது
பசி தாங்குமா இளமை இனி பரிமாற வா இளமாங்கனி

வனிதாமணி ஹா வனமோகினி வந்தாடு
கனியோ கனி உன் ருசியோ தனி கொண்டாடு
உன் கண்களோ திக்கித்திக்கி பேசுதடி
என் நெஞ்சிலே தகதிமி தாளமடி
உன் கண்களோ திக்கித்திக்கி பேசுதடி
என் நெஞ்சிலே தகதிமி தாளமடி வந்து ஆடடி
வனிதாமணி ஹா வனமோகினி வந்தாடு
கனியோ கனி உன் ருசியோ தனி கொண்டாடு

அணைத்தவன் எனக்குள்ளே குளித்தவன் ஓஓஓ ஓஒ
சுவைத்தவள் உயிர்வரை இனித்தவள்
இதயம் ததீம் ததீம் ததீம் போடாதோ
இளமை தந்தோம் தந்தோம் என்றே பாடாதோ
விடியும்வரை மழையோ மழை உன் கலையே கலை கண்ணா
கலையின் வகை அறியும்வரை உடையே பகை கண்ணே
கொஞ்சினாலும் மிஞ்சினாலும் கோடு தாண்டாதே

வனிதாமணி ஹா வனமோகினி வந்தாடு
பம்பிம்பம் பிம்பம் பிம்பபம்
கனியோ கனி உன் ருசியோ தனி கொண்டாடு
பம்பிம்பம் பிம்பம் பிம்பபம்
உன் கண்களோ திக்கித்திக்கி பேசுதடி
என் நெஞ்சிலே தகதிமி தாளமடி
உன் கண்களோ திக்கித்திக்கி பேசுதடி
என் நெஞ்சிலே தகதிமி தாளமடி வந்து ஆடடி
வனிதாமணி ஹா வனமோகினி வந்தாடு
பம்பிம்பம் பிம்பம் பிம்பபம்
கனியோ கனி உன் ருசியோ தனி கொண்டாடு
பம்பிம்பம் பிம்பம் பிம்பபம்

விடிந்தது நிறம் என்ன வெளுத்தது ஓஓஓ ஓஒ
இரவினில் மன்னன் வந்து வெளுத்தது ஓஓஓ ஓஒ
இரவில் சச்சம் சச்சம் சச்சம் போதாதோ
பகலில் மிச்சம் மிச்சம் மிச்சம் வாராதோ
இரவொரு விதம் பகலொரு விதம் பருவம் பதம் கண்டேன்
சுகமோ சுகம் தினமொரு ரகம் இதுவே இதம் என்பேன்
நான் தொடாத பாகம் தன்னை தென்றல் தீண்டாது

வனிதாமணி ஹா வனமோகினி வந்தாடு
பம்பிம்பம் பிம்பம் பிம்பபம்
கனியோ கனி உன் ருசியோ தனி கொண்டாடு
பம்பிம்பம் பிம்பம் பிம்பபம்
உன் கண்களோ திக்கித்திக்கி பேசுதடி
என் நெஞ்சிலே தகதிமி தாளமடி
உன் கண்களோ திக்கித்திக்கி பேசுதடி
என் நெஞ்சிலே தகதிமி தாளமடி வந்து ஆடடி
வனிதாமணி ஹா வனமோகினி வந்தாடு
பம்பிம்பம் பிம்பம் பிம்பபம்
கனியோ கனி உன் ருசியோ தனி கொண்டாடு
பம்பிம்பம் பிம்பம் பிம்பபம்

---------------------------------------------------------------------------------------------------------

பாடல்: இது மார்கழி வேளை
திரைப்படம்: இளங்கன்று
இசை: கங்கை அமரன்

இது மார்கழி வேளை இங்கு மன்மத லீலை
இது மார்கழி வேளை இங்கு மன்மத லீலை
ஒரு பார்வை பார்த்தால் வேர்வை ஊறுதே ஹோய்
அட மோகம் என்றும் நியாயம் பார்க்காதே ஹா

இது மார்கழி வேளை இங்கு மன்மத லீலை
ஒரு பார்வை பார்த்தால் வேர்வை ஊறுதே
அட மோகம் என்றும் நியாயம் பார்க்காதே ஹோய்

ஹே...ஹே...ஹே...என்னென்ன...ஜாலங்கள்
என் கண்கள் காணாத கோலங்கள்
.........தர்மங்கள்...தாண்டுங்கள்
நேரங்கள் எல்லாமே நியாயங்கள்
சுண்டு விரல்தான் பட்டது
இந்த மனசோ கெட்டது
வா வா போதாது

இது மார்கழி வேளை இங்கு மன்மத லீலை
ஒரு பார்வை பார்த்தால் வேர்வை ஊறுதே ஹா ஹா
அட மோகம் என்றும் நியாயம் பார்க்காதே ஹோய்

ஹே...ஹே...ஹே தாகங்கள்...தீராதோ
தேனாறு பாலாறாய் மாறாதோ
.........பூமஞ்சம்...தேடாதோ
பெண் கூந்தல் பாயொன்று போடாதோ
என்னை இழந்தேன் மன்மதா
இன்னும் உலகம் உள்ளதா
வாழ்க்கை வாராதா

இது மார்கழி வேளை இங்கு மன்மத லீலை
ஒரு பார்வை பார்த்தால் வேர்வை ஊறுதே ஹே
அட மோகம் என்றும் நியாயம் பார்க்காதே ஹோய்
இது மார்கழி வேளை இது மார்கழி வேளை
இங்கு மன்மத லீலை இங்கு மன்மத லீலை
இது மார்கழி வேளை இது மார்கழி வேளை
இங்கு மன்மத லீலை இங்கு மன்மத லீலை

---------------------------------------------------------------------------------------------------------

பாடல்: கண்ணுக்குள்ளே என்னை கண்டேன்
திரைப்படம்: சொல்வதெல்லாம் உண்மை
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்

கண்ணுக்குள்ளே என்னை கண்டேன்
கண்ணை மூடாதே பப பப்பா
கையில் வந்து கட்டுப்பட்டு
முத்தத்தாலே மெட்டுக்கட்டு
இதழும் இதழும் கவிதை எழுதும்
கண்ணுக்குள்ளே என்னைக்கண்டேன்
கண்ணை மூடாதே ரப பப்பா...பப பப்பா

தாகங்கள் முழுதும் தணியவில்லை
ஏன் உன்னை பருக முடியவில்லை
ஏன் என்று விடையும் தெரியவில்லை
வா கண்ணே பருவம் பெரிய தொல்லை
காதல் வெள்ளம் பருக பருக பெருகும் வழியும்
பாவை உள்ளம் தழுவும் பொழுதில் இளகும் உருகும்
காதல் வெள்ளம் பருக பருக பெருகும் வழியும்
பாவை உள்ளம் தழுவும் பொழுதில் இளகும் உருகும்
தேகம் எங்கும் தித்திக்கும்...ஹே ஹே ஹே

கண்ணுக்குள்ளே என்னை கண்டேன்
கண்ணை மூடாதே பப பப்பா...ரப பப்பா

பூ ஒன்று புடவை அணிந்ததென்ன
நான் அள்ள அதுவும் கலைந்ததென்ன
என் மேனி இரவில் நனைந்ததென்ன
என் பெண்மை உறவில் மலர்ந்ததென்ன
காதல் தேவி இரவில் இணைவாள் மறுநாள் எழுவாள்
பகலில் கேட்டால் அருகில் வருவாள் உடனே மறைவாள்
காதல் தேவி இரவில் இணைவாள் மறுநாள் எழுவாள்
பகலில் கேட்டால் அருகில் வருவாள் உடனே மறைவாள்
மாலை வந்தால் மன்னிப்பாள்...ஹே

கண்ணுக்குள்ளே என்னை கண்டேன்
கண்ணை மூடாதே ரப பப்பா
கையில் வந்து கட்டுப்பட்டு
முத்தத்தாலே மெட்டுக்கட்டு
இதழும் இதழும் கவிதை எழுதும்

--------------------------------------------------------------------------------------------------------

பாடல்: பூங்காற்றே பூங்காற்றே
திரைப்படம்: சந்தன மலர்கள்
இசை: கங்கை அமரன்

பூங்காற்றே...பூங்காற்றே
என் காதல் நெஞ்சின் பாடலாக வா வா
ஒரு தூது செல்லும் தோழியாக வா
அலை மோதுதே மனம் மீதிலே
புது ஆசை வெள்ளங்களே
பூங்காற்றே...பூங்காற்றே

காலங்கள் தோறும் பருவங்கள் மாறும்
காதலின் ராகம் மோஹனம் ஆகும்
அந்தி வரும் வேளையில்
இந்த மலர்ச்சோலையில்
வரும் மதனோற்சவம்

இது பூவையைத் தேடிடும் புது உறவு
இதழோரத்தில் ஒரு நிலவு
வண்ண மேகங்கள் கூடுது
இழையுது தழுவுது துள்ளுது என் மனமே
பூங்காற்றே...பூங்காற்றே

மலைவாசி பெண்ணே என்னாசை கண்ணே
மனதோடு உன்னை அணைப்பவன் நானே
நீ வன மோஹினி என் மன மோஹினி
இதழ் செம்மாங்கனி...ஹா

இளம் மூங்கிலின் மெல்லிய கிளைகளிலே
பனித்துளிகளின் அழகினிலே
வண்ண மாமயில் ஆடுது
பூங்குயில் கூவுது மயங்குது என் மனமே

பூங்காற்றே...பூங்காற்றே
என் காதல் நெஞ்சின் பாடலாக வா வா
ஒரு தூது செல்லும் தோழியாக வா ஹா
அலை மோதுதே மனம் மீதிலே
புது ஆசை வெள்ளங்களே
பூங்காற்றே...பூங்காற்றே

--------------------------------------------------------------------------------------------------------

பாடல்: ரோஜா தேகமே
திரைப்படம்: இளமை
இசை: கங்கை அமரன்

ரோஜா தேகமே இளம் காதல் மேகமே
ரோஜா தேகமே இளம் காதல் மேகமே
உன் நெஞ்சம் நான் வாழும் காதல் மாளிகை
நீதானே என் கண்ணில் ஆடும் தேவதை

ரோஜா தேகமே இளம் காதல் மேகமே
உன் நெஞ்சம் நான் வாழும் காதல் மாளிகை
நான்தானே உன் கண்ணில் ஆடும் தேவதை

கோடை நாளிலும் ஆசை வைகையில் வெள்ளம் பாய்கிறதே
ஆடையில் மூடிய தாழம்பூவுடல் தீயாய் காய்கிறதே
ஆடும் தாமரை அன்னக்கொடியிடை கையில் தவழட்டுமே
ஏலப்பூங்குழல் எந்தன் மார்பினில் கோலம் வரையட்டுமே
நான்தானே...நான்தானே பூந்தோகை நீ மீட்டும் பொன்வீணை
ஜாடை பார்வைகள் நெஞ்சில் மேடைகள் போடுதே

ரோஜா தேகமே இளம் காதல் மேகமே
உன் நெஞ்சம் நான் வாழும் காதல் மாளிகை
நான்தானே உன் கண்ணில் ஆடும் தேவதை
ரோஜா தேகமே இளம் காதல் மேகமே

மின்னும் மாதுளை கன்னத்தோட்டத்தில் முத்தம் விதைத்திடவா
முத்தப்போர்வையில் மெத்தை நாடகம் நித்தம் ஆடிடவா வா
ஏங்கும் பூமியை கேட்டா மாமழை மண்ணில் பொழிகிறது
தூங்கும் பூவினை கேட்டா வண்டுகள் தேனை எடுக்கிறது
ஏதேதோ...ஏதேதோ மோகங்கள் உண்டாகும் நேரங்கள்
தென்னங்கீற்றுகள் தென்றல் காற்றினில் மோதுதே

ரோஜா தேகமே இளம் காதல் மேகமே
உன் நெஞ்சம் நான் வாழும் காதல் மாளிகை
நீதானே என் கண்ணில் ஆடும் தேவதை
ரோஜா தேகமே இளம் காதல் மேகமே
--------------------------------------------------------------------------------------------------------

பாடல்: தேவி வந்தாள் தனிமையில்
திரைப்படம்: அழகு
இசை: ஜி.கே.வெங்கடேஷ்

தேவி வந்தாள்
தனிமையில் உல்லாசம் தேட
தேவி வந்தாள்
தனிமையில் உல்லாசம் தேட
தேடி வந்தாள் தேவன் சன்னிதி

தேவி வந்தாள்
தனிமையில் உல்லாசம் தேட
தேடி வந்தாள் தேவன் சன்னிதி
தேவி வந்தாள்
தனிமையில் உல்லாசம் தேட

ஏகாந்த வேளை ஒன்று
எதிர் பார்த்து ஏங்கி நின்று
பாதாதி கேசம் இன்று
பரிமாற ஓடி வந்தாள்
திருக்கோயில் வாசல் இன்று
திறக்கின்ற நேரம்ன்று
ஆரம்பம் ஆகும் ஆராதனை

தேவி வந்தாள்
தனிமையில் உல்லாசம் தேட

பசியாற வேண்டும் என்றால்
பதமான வாழை உண்டு
இளவேனில் கோடை என்றால்
இள நீரை கேட்பதுண்டு
யார் கொண்ட தாகம் இன்று
யார் தீர்க்கக் கூடும் என்று
அன்பே உன் உள்ளம் அறியாததோ

தேவி வந்தாள்
தனிமையில் உல்லாசம் தேட
தேடி வந்தாள் தேவன் சன்னிதி
தேவி வந்தாள்
தனிமையில் உல்லாசம் தேட

--------------------------------------------------------------------------------------------------------

பாடல்: உறவெனும் புதிய வானில்
திரைப்படம்: நெஞ்சத்தைக் கிள்ளாதே
இசை: இளையராஜா



பப பபா பபப பாபா
பப பபா பபப பாபா
உறவெனும் புதிய வானில்
பறந்ததே இதய மோகம்
ஓடும் அலை என மனம் போகும்
கனவிலும்...பப பப்பா
நினைவிலும்...பப பப்பா
புது சுகம்...பப பப்பா
உறவெனும் புதிய வானில்
பறந்ததே இதய மோகம்

பார்வை ஒவ்வொன்றும் கூறும் பொன் காவியம்
பாவை என்கின்ற கோலம் பெண் ஓவியம்
மாலை வரும் போதிலே நாளும் உந்தன் தோளிலே
கனவில் ஆடும் நினைவு யாவும்
கனவில் ஆடும் நினைவு யாவும் இனிய பாவம்

உறவெனும் புதிய வானில்
பறந்ததே இதய மோகம்

நெஞ்சில் உள்ளூற ஓடும் என் ஆசைகள்
நேரம் இல்லாமல் நாளும் உன் பூஜைகள்
எந்தன் மனம் எங்கிலும் இன்பம் அது சங்கமம்
இணைந்த கோலம் இனிய கோலம்
இணைந்த கோலம் இனிய கோலம் இளமைக்காலம்

உறவெனும் புதிய வானில்
பறந்ததே இதய மோகம்
ஓடும் அலை என மனம் போகும்
கனவிலும்...பப பப்பா
நினைவிலும்...பப பப்பா
புது சுகம்...பப பப்பா
பப பப்பா பபப பாபா
பாபா பபபா பபப பாபா

--------------------------------------------------------------------------------------------------------

பாடல்: ரோஜாவைத் தாலாட்டும் தென்றல்
திரைப்படம்: நினைவெல்லாம் நித்யா
இசை: இளையராஜா



ரோஜாவைத் தாலாட்டும் தென்றல்
பொன் மேகம் நம் பந்தல்
உன் கூந்தல் என் ஊஞ்சல்
உன் வார்த்தை சங்கீதங்கள் ஆ ஹா
ரோஜாவைத் தாலாட்டும் தென்றல்
பொன் மேகம் நம் பந்தல்

இலைகளில் காதல் கடிதம்
வண்டு எழுதும் பூஞ்சோலை
விரல்களில் மேனி முழுதும்
இளமை வரையும் ஓர் கவிதை

இலைகளில் காதல் கடிதம்
வண்டு எழுதும் பூஞ்சோலை
விரல்களில் மேனி முழுதும்
இளமை வரையும் ஓர் கவிதை

மௌனமே சம்மதம் என்று ஹா
தீண்டுதே மன்மத வண்டு ஹா
மௌனமே சம்மதம் என்று
தீண்டுதே மன்மத வண்டு
பார்த்தாலே தள்ளாடும் பூஞ்செண்டு

ரோஜாவைத் தாலாட்டும் தென்றல்
பொன் மேகம் நம் பந்தல்
உன் கூந்தல் என் ஊஞ்சல்

வசந்தங்கள் வாழ்த்தும் பொழுது
உனது கிளையில் பூவாவேன்
இலையுதிர் காலம் முழுதும்
மகிழ்ந்து உனக்கு வேராவேன்

வசந்தங்கள் வாழ்த்தும் பொழுது
உனது கிளையில் பூவாவேன்
இலையுதிர் காலம் முழுதும்
மகிழ்ந்து உனக்கு வேராவேன்

பூவிலே மெத்தைகள் தைப்பேன் ஹா
கண்ணுக்குள் மங்கையை வைப்பேன் ஹா
பூவிலே மெத்தைகள் தைப்பேன்
கண்ணுக்குள் மங்கையை வைப்பேன்
நீ கட்டும் சேலைக்கு நூலாவேன் ஆ ஹா

ரோஜாவைத் தாலாட்டும் தென்றல்
பொன் மேகம் நம் பந்தல்
உன் கூந்தல் என் ஊஞ்சல்
உன் வார்த்தை சங்கீதங்கள்
ரோஜாவைத் தாலாட்டும் தென்றல்
பொன் மேகம் நம் பந்தல்

--------------------------------------------------------------------------------------------------------
பாடல்: மஞ்சத்தில் நான்
திரைப்படம்: சொல்வதெல்லாம் உண்மை
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்


மஞ்சத்தில் நான் கொஞ்சத்தான் நீ
மஞ்சத்தில் நான் கொஞ்சத்தான் நீ
ராத்திரி நேரம் காத்திருக்கு
ரகசிய ஆசை பூத்திருக்கு
பஞ்சுடன் தீயை சேர்த்திட வா
பல நாள் கணக்கை தீர்த்திட வா
பூங்கொடி பாய மாங்கனி தேகம்
ஏங்கிடும் நேரம்

Meet...me...right...now
Meet...me...right...now
Meet me right now
Meet me right now
மஞ்சத்தில் நீ கொஞ்சத்தான் நான்
ராத்திரி நேரம் காத்திருக்கு
ரகசிய ஆசை பூத்திருக்கு
பஞ்சுடன் தீயை சேர்த்திட வா
பல நாள் கணக்கை தீர்த்திட வா
பூங்கொடி பாய மாங்கனி தேடும்
காளையின் தேகம்

வஞ்சி இவள் சலவை நிலவின் பளிங்கு கலவை
என் விழியில் விழுந்த மனது உருகும் அனலில்
யூ ரூஹா ரூஹா ரீ யாரா ரப்பப்பா
காமத்தில் மேனி கொதிக்க
பாவையின் தேகம் மூலிகை ஆகும்
மோகத்தை மூடி மறைக்க
காவலை மீறி ஆவலைத் தூண்டும்
மேகத்தில் கிள்ளி எடுத்த
ஏழு நிறத்தின் வில்லை வளைத்து
தேகத்தின் புள்ளிகளுக்கு
கோடுகள் இட்டு கோலம் நடத்து

மெஹபூபா...ஹே ஹே ஹே ஹே யா
மஞ்சத்தில் நீ கொஞ்சத்தான் நீ
மஞ்சத்தில் நீ...நீ நீ நீ

வேங்கை இவன் விரலின் அசைவில் புயலும் பதுங்கும்
நான் நினைத்தால் எழுந்த கடலின் அலையும் அடங்கும்
யூ ரூஹா ரூஹா ரீ யாரா ரப்பப்பா
வீரத்தில் வென்றவர் எல்லாம்
வீழ்ந்தவர்தானே பெண்ணிடம் வந்து
வேகத்தில் துள்ளிட வேண்டாம்
வீழ்வது நீதான் நிச்சயம் இன்று
ஆழத்தை கன்னியர் நெஞ்சில்
கண்டவனுக்கு என்னடி எல்லை
ஆபத்தை கொஞ்சுவதுண்டு
அஞ்சுவதில்லை மின்னலின் பிள்ளை

தில்ரூபா...ஹே ஹே ஹே ஹே யா
மஞ்சத்தில் நீ கொஞ்சத்தான் நீ
ராத்திரி நேரம் காத்திருக்கு
ரகசிய ஆசை பூத்திருக்கு
பஞ்சுடன் தீயை சேர்த்திட வா
பல நாள் கணக்கை தீர்த்திட வா
பூங்கொடி பாய மாங்கனி தேடும்
காளையின் தேகம்

---------------------------------------------------------------------------------------------------------

பாடல்: வந்தாய் மழையாய் வந்தனம்
திரைப்படம்: காட்டு ராஜா
இசை: சக்ரவர்த்தி


ஆஆ ஆஆ ஆ வந்தாய் மழையாய் வந்தனம்
ஆஆ ஆஆ ஆ மனதை மலராய் தந்தனம்
நீயே மோகத்தின் மூலதனம்
பருவம் கண்டு நீ கொடுத்ததனம்
எங்களின் பருவத்து சீதனம்
இன்பம் கொடுக்கும் ஓர் சாதனம்
தேவர் உலகிலே வாழ்ந்திடும் அனுபவம்
லல் லால லால லல
ஆஆ ஆஆ ஆ வந்தாய் மழையாய் வந்தனம்
ஆஆ ஆஆ ஆ மனதை மலராய் தந்தனம்

இளமை என்னும் நந்தவனம்
இரவினில் பூக்க வந்த தனம்
காற்றும் மேகமும் கலந்த மாதிரி
கூடிட வேண்டும் வாலிபம்
நெருங்க நெருங்கவோ காதல் ரசம்
நெஞ்சுக்குள் இன்ப நினைவு தரும்
வாடைக்காற்று வாட்டுது என்னை
சூடா உன்னை வளைச்சிக்கணும்
மின்னலை நெஞ்சில் நான் கண்டேன்
இடிகளின் ஓசையை கேட்கின்றேன்
மேகம் என்னும் தேரிலே
வான தேவனின் வழிப்பயணம்
வான தேவனின் வழிப்பயணம்

ஆஆ ஆஆ ஆ வந்தாய் மழையாய் வந்தனம்
ஆஆ ஆஆ ஆ மனதை மலராய் தந்தனம்

அடடா உந்தன் கள்ளத்தனம்
அளப்பதற்கன்றோ கன்னி மனம்
காதல் தீயிலே வேகும் போதிலே
அணைத்திட பூமழை ஆடைதொடும்
முத்தத்தில் உனது தேன் வதனம்
பூத்தது அதிலே தான் உலகம்
தேவ தேவதை கூந்தல் பாயிலே
நித்திரை கொள்வது என்ன சுகம்
சிறு சிறு மழைத்துளி உள்ளோட
குலுங்கும் உன் உடல் தள்ளாட
காதலன் கைகளில் அர்ப்பணம்
காதலன் கைகளில் அர்ப்பணம்
காதலன் கைகளில் அர்ப்பணம்

ஆஆ ஆஆ ஆ வந்தாய் மழையாய் வந்தனம்
ஆஆ ஆஆ ஆ மனதை மலராய் தந்தனம்
நீயே மோகத்தின் மூலதனம்
பருவம் கண்டு நீ கொடுத்ததனம்
எங்களின் பருவத்து சீதனம்
இன்பம் கொடுக்கும் ஓர் சாதனம்
தேவர் உலகிலே வாழ்ந்திடும் அனுபவம்
லல ல லல லல
ஆஆ ஆஆ ஆ வந்தாய் மழையாய் வந்தனம்
ஆஆ ஆஆ ஆ மனதை மலராய் தந்தனம்

--------------------------------------------------------------------------------------------------------

பாடல்: ஆசைதீர பேச வேண்டும் உன்னிடத்தில்
திரைப்படம்: ரத்த பாசம்
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்

ஆஆஆ...லா லலல்ல லலல் லலா
ஆ ஹா...ஆஆ ஆஆ ஆஆஆ ஆஆஆ

ஆசைதீர பேசவேண்டும் உன்னிடத்தில் அந்தரங்கங்களை
அள்ளி அள்ளி கொஞ்சவேண்டும் இவ்விடத்தில் இந்த அங்கங்களை

ஆசைதீர பேசவேண்டும் உன்னிடத்தில் அந்தரங்கங்களை
அள்ளி அள்ளி கொஞ்சவேண்டும் இவ்விடத்தில் இந்த அங்கங்களை

சொர்க்க லோகத்திலே நாமும் நிற்கும் நேரத்திலே
சொர்க்க லோகத்திலே நாமும் நிற்கும் நேரத்திலே
ஆசைதீர பேசவேண்டும் உன்னிடத்தில் அந்தரங்கங்களை
அள்ளி அள்ளி கொஞ்சவேண்டும் இவ்விடத்தில் இந்த அங்கங்களை


இந்த நாட்டு மக்களுக்கு இந்த யோகம் வேத பாராயணம்
எந்த வீட்டில் பார்த்த போதும் காதல் மோகம் புதிய இராமாயணம்
நாலு கண்கள் பாடுகின்ற அன்பு ராகம் என்றும் கிருஷ்ணார்பணம்
புதிய இராமாயணம் இங்கே என்றும் கிருஷ்ணார்பணம்
மாலை நேரம் வந்தால் ஆணும் பெண்ணும் ஒன்றாய்
அனுபவிக்கும் அற்புதங்கள் இந்த நாட்டிலே


ஆசைதீர பேசவேண்டும் உன்னிடத்தில் அந்தரங்கங்களை
அள்ளி அள்ளி கொஞ்சவேண்டும் இவ்விடத்தில் இந்த அங்கங்களை
சொர்க்க லோகத்திலே நாமும் நிற்கும் நேரத்திலே

நாடுவிட்டு நாடு வந்து பாடிநிற்கும் மேக கூட்டங்களே
காதலர்க்கு பூக்கள் தந்து வாழவைக்கும் லில்லி தோட்டங்களே
ஒன்றுபட்டு சொந்தம் கொண்ட எங்களுக்கும் அன்பு காட்டுங்களே
மேக கூட்டங்களே இங்கு அன்பு காட்டுங்களே
பொங்குகின்ற தண்ணீர் பூமியெங்கும் ஒன்று
காதல் கீதம் தேசமெங்கும் ஒன்று அல்லவா

ஆசைதீர பேசவேண்டும் உன்னிடத்தில் அந்தரங்கங்களை
அள்ளி அள்ளி கொஞ்சவேண்டும் இவ்விடத்தில் இந்த அங்கங்களை
சொர்க்க லோகத்திலே நாமும் நிற்கும் நேரத்திலே

--------------------------------------------------------------------------------------------------------

பாடல்: அந்தி வரும் நேரம்
திரைப்படம்: முந்தானை முடிச்சு
இசை: இளையராஜா



அந்தி வரும் நேரம்...வந்ததொரு ராகம்
அந்தி வரும் நேரம் வந்ததொரு ராகம்
ஏதேதோ மோகம்...இனி தீராதோ தாகம்
ஏதேதோ மோகம்...இனி தீராதோ தாகம்
அந்தி வரும் நேரம்


மந்திரங்கள் ஒலித்தது
மங்கை உடல் சிலிர்த்தது
சங்கமத்தின் சுகம் நினைத்து

சிந்து கவி பிறந்தது
சிந்தனைகள் பறந்தது
சந்தனத்து உடல் அணைத்து

இதழில் ஒரு ஓலை
எழுதும் இந்த வேளை

இளமை என்னும் சோலை
முழுதும் இன்ப லீலை ஹா

நீராடுது மாதளிர் தேகம்
போராடுது காதலின் வேகம்
என்றென்றும் ஆனந்த யோகம்

அந்தி வரும் நேரம்...வந்ததொரு ராகம்
ஏதேதோ மோகம்...இனி தீராதோ தாகம்


இன்பத்துக்கு முகவுரை
என்றுமில்லை முடிவுரை
நீ இருக்க ஏது குறை

பாதம் முதல் தலை வரை
பார்த்து நின்ற தலைவரை
பாட வந்தேன் நூறு முறை

அணைத்தால் தேவலோகம்
அருகே வந்து சேரும்

நினைத்தால் இங்கு யாவும்
இனிமை என்று கூறும்

ம்ம் ஆஹா இது மார்கழி மாதம்
அம்மாடியோ முன்பனி வீசும்
சூடேற்றும் பூமுல்லை வாசம்


அந்தி வரும் நேரம்...வந்ததொரு ராகம்
ஏதேதோ மோகம்...இனி தீராதோ தாகம்
ஏதேதோ மோகம்...இனி தீராதோ தாகம்

--------------------------------------------------------------------------------------------------------

பாடல்: ராஜா என்பார் மந்திரி என்பார்
திரைப்படம்: புவனா ஒரு கேள்விக்குறி
இசை: இளையராஜா



ராஜா என்பார் மந்திரி என்பார்
ராஜ்ஜியம் இல்லை ஆள
ஒரு ராணியும் இல்லை வாழ
ஒரு உறவுமில்லை அதில் பிரிவுமில்லை
அந்தரத்தில் ஊஞ்சல் ஆடுகிறேன் நாளும்
அந்தரத்தில் ஊஞ்சல் ஆடுகிறேன் நாளும்
ராஜா என்பார் மந்திரி என்பார்
ராஜ்ஜியம் இல்லை ஆள
ஒரு ராணியும் இல்லை வாழ

கல்லுக்குள் ஈரம் இல்லை
நெஞ்சுக்கும் இறக்கம் இல்லை
ஆசைக்கு வெட்கம் இல்லை
அனுபவிக்க யோகம் இல்லை
பைத்தியம் தீர வைத்தியம் இல்லை
உலகில் எனக்கு ஒரு வழி இல்லை

ராஜா என்பார் மந்திரி என்பார்
ராஜ்ஜியம் இல்லை ஆள
ஒரு ராணியும் இல்லை வாழ

நிலவுக்கு வானம் உண்டு
மலருக்கு வாசம் உண்டு
கொடிக்கொரு கிளையும் உண்டு
எனக்கென்று என்ன உண்டு
ஏன் படைத்தானோ இறைவனும் என்னை
மனதில் எனக்கு நிம்மதி இல்லை


ராஜா என்பேன் மந்திரி என்பேன்
ராஜ்ஜியம் உனக்கு உண்டு
ஒரு ராஜகுமாரன் உண்டு
நல் உறவுமுண்டு அதில் பரிவுமுண்டு
அந்தரத்தில் ஊஞ்சல் ஆடுவதேன் நாளும்

தெய்வத்தில் உன்னைக் கண்டேன்
தினம் தினம் பூஜை செய்தேன்
நிலவுக்கு களங்கம் என்று
உறவுக்கு விலகி நின்றேன்
மயக்கமும் ஏனோ கலக்கமும் ஏனோ
உலகில் உனக்கு சரித்திரம் உண்டு

ராஜா என்பேன் மந்திரி என்பேன்
ராஜ்ஜியம் உனக்கு உண்டு
ஒரு ராஜகுமாரன் உண்டு
நல் உறவுமுண்டு அதில் பரிவுமுண்டு
அந்தரத்தில் ஊஞ்சல் ஆடுவதேன் நாளும்

--------------------------------------------------------------------------------------------------------
பாடல்: ஒரு கோடி இன்பங்கள்
திரைப்படம்: நீயா
இசை: ஷங்கர் கணேஷ்



ஒரு கோடி இன்பங்கள் உருவாகும் அங்கங்கள்
அசைந்தாடும் அழகு கோலங்கள்
ஓஹோ அணைத்தாலே தோன்றும் சொர்க்கங்கள்


ஒரு கோடி இன்பங்கள் உருவாகும் அங்கங்கள்
அசைந்தாடும் அழகு கோலங்கள்
ஓஹோ அணைத்தாலே தோன்றும் சொர்க்கங்கள்


பாவை இதயம் போதை உலகம்
பார்வைக் கணைகளை ஏவும்
மோக மலர்களைத் தூவும் ஹா
மோக மலர்களைத் தூவும்

மெல்லப்பிடி அல்லிக்கொடி மெதுவான பூவினம்
மெச்சும்படி தேனைக்குடி மயங்காதோ என் மனம்

ஆ வேகம் வந்தாலென்ன ஹா ஹா ஹா ஹா
விருந்து தந்தாலென்ன ஹா ஹா ஹா ஹா
வேகம் வந்தாலென்ன ஹா விருந்து தந்தாலென்ன

ஒரு கோடி இன்பங்கள் உருவாகும் அங்கங்கள்
அசைந்தாடும் அழகு கோலங்கள்
ஓஹோ அணைத்தாலே தோன்றும் சொர்க்கங்கள்

ஆடும் அலைகள் கூடும் கலையை
தேடித் திரிவது தாகம்

தேவை முடிந்ததும் தீரும் ஹா
தேவை முடிந்ததும் தீரும்

வஞ்சிக்கிளி கொஞ்சிக்களி வா ராஜா என்னிடம்
நெஞ்சம்தொட மஞ்சம்தர நீராடும் பெண்ணிடம்
மேகம் பொழிந்தாலென்ன
மேனி நனைந்தாலென்ன ஆஹா ஆஹா ஆஹா
மேகம் பொழிந்தாலென்ன
மேனி நனைந்தாலென்ன ஹா ஹா ஹா ஹா

ஒரு கோடி இன்பங்கள் உருவாகும் அங்கங்கள்
அசைந்தாடும் அழகு கோலங்கள்
ஓஹோ அணைத்தாலே தோன்றும் சொர்க்கங்கள்

--------------------------------------------------------------------------------------------------------

பாடல்: அடடா இதுதான் சுகமோ
திரைப்படம்: துடிக்கும் கரங்கள்
இசை: இளையராஜா



அடடா இதுதான் சுகமோ
மலர்களின் இதழ்வழி
பனிமழை விழும் சுகமோ
இனிமேல் தினமும் விழாக்கோலமோ


அடடா இதுதான் சுகமோ
மலர்களின் இதழ்வழி
பனிமழை விழும் சுகமோ
இனிமேல் தினமும் விழாக்கோலமே


விழிகளும் விழிகளும்
தழுவிடும் பொழுதினில்
ஏதோ ஏதோ லீலைகள்

விரல்களும் விரல்களும்
உரசிடும் பொழுதினில்
காதல் தீயின் ஜுவாலைகள்

கன்னங்களில் தாமரை தாது தூவும்
சின்னங்களில் தேன்மழை சாரல் வீசும்

கரும்கூந்தலின் ஊஞ்சலில் பூக்கள் ஆடும்

அடடா ஹா ஹ ஹா
இதுதான் சுகமோ ஹோ ஹொ ஹோ
ஹா மலர்களின் இதழ்வழி
பனிமழை விழும் சுகமோ

இனிமேல் தினமும் விழாக்கோலமே

ஒரு கொடி இடையினில்
இரு குடை பிடித்தது
ஏனோ ஏனோ கண்மணி

தழுவிடும் இருவரை
நிலவொளி சுட வரும்
நேரம் இதோ பௌர்ணமி

நீலோர்ப்பணம் கண்ணிலே ஜாடை காட்டும்
நான் தொட்டதும் குங்குமம் சாயம் தீட்டும்
உடல் வீணையின் தந்திகள் என்னை மீட்டும்

அடடா ஹா ஹ ஹா
இதுதான் சுகமோ ஹோ ஹொ ஹோ
மலர்களின் இதழ்வழி
பனிமழை விழும் சுகமோ

இனிமேல் தினமும் விழாக்கோலமே
லல லால லா லல லால லா


---------------------------------------------------------------------------------------------------------

பாடல்: உருகினேன் உருகினேன்
திரைப்படம்: அண்ணே அண்ணே
இசை: இளையராஜா

உருகினேன் உருகினேன் கண்ணனே மன்னனே
உன்னையே எண்ணியே ஏங்கினேன் தினமே

உருகினேன் உருகினேன் கண்மணி பொன்மணி
உன்னையே எண்ணியே ஏங்கினேன் தினமே

ஹோ...உருகினேன்...உருகினேன்

காதல் மோகம் கைகூடுமோ
கண்கள் எழுதும் கனவாகுமோ
காதல் மோகம் கைகூடுமோ
கண்கள் எழுதும் கனவாகுமோ

ஏட்டில் எழுத்தில் இதுபோல் ஏது
உயிரில் உயிராய் இருப்பாள் மாது

உனையே கோடி கோடி ஜென்மம் சேருவேன்

உருகினேன்...உருகினேன்
உருகினேன் உருகினேன் கண்ணனே மன்னனே
உன்னையே எண்ணியே ஏங்கினேன் தினமே

உருகினேன் உருகினேன் கண்மணி பொன்மணி
உன்னையே எண்ணியே ஏங்கினேன் தினமே


பாவை வடிவிலோர் பட்டுப்பூச்சி
பறந்தே நெஞ்சில் விழுந்ததோ
பாவை வடிவிலோர் பட்டுப்பூச்சி
பறந்தே நெஞ்சில் விழுந்ததோ

மானோ மீனோ கண்விழி இந்த பெண்விழி
பப பபா...பப பா ஏதோ எதுவோ சொல்லுதே
என்னை கொல்லுதே...பப பபா
உனக்காக பிறந்தேன் எனை நானே மறந்தேன்
உனக்காக பிறந்தேன் எனை நானே மறந்தேன்

மடிமேல் இருத்தி உனைத் தாலாட்டவா

உருகினேன்...உருகினேன்
உருகினேன் உருகினேன் கண்ணனே மன்னனே
உன்னையே எண்ணியே ஏங்கினேன் தினமே

உருகினேன் உருகினேன் கண்மணி பொன்மணி
உன்னையே எண்ணியே ஏங்கினேன் தினமே

ஹோ...லல லலா...ரப பா...ரப பபா

---------------------------------------------------------------------------------------------------------

பாடல்: பருவமே புதிய பாடல் பாடு
திரைப்படம்: நெஞ்சத்தைக் கிள்ளாதே
இசை: இளையராஜா



பருவமே புதிய பாடல் பாடு
பருவமே புதிய பாடல் பாடு
இளமையின் பூந்தென்றல் ராகம்
இளமையின் பூந்தென்றல் ராகம்
பருவமே புதிய பாடல் பாடு

பூந்தோட்டத்தில் ஹோய் காதல் கண்ணம்மா
பூந்தோட்டத்தில் ஹோய் காதல் கண்ணம்மா

சிரிக்கிறாள் ஹோ ஓஹோ ரசிக்கிறான் ராஜா
சிவக்கிறாள் ஹோ ஓஹோ துடிக்கிறாள் ராணி

தீபங்கள் போலாடும் பார்வை சேரும்
பருவமே புதிய பாடல் பாடு

தேனாடும் முல்லை நெஞ்சில் என்னவோ
தேனாடும் முல்லை நெஞ்சில் என்னவோ

அடைக்கிறான் ஹோ ஓஹோ நடிக்கிறான் தோழன்
அணைக்கிறான் ஹோ ஓஹோ தவிக்கிறாள் தோழி

காலங்கள் பொன்னாக மாறும் நேரம்

பருவமே புதிய பாடல் பாடு
இளமையின் பூந்தென்றல் ராகம்
பருவமே புதிய பாடல் பாடு

---------------------------------------------------------------------------------------------------------

பாடல்: முத்தாடுதே முத்தாடுதே
திரைப்படம்: நல்லவனுக்கு நல்லவன்
இசை: இளையராஜா



முத்தாடுதே முத்தாடுதே ராகம்
பித்தானதே பித்தானதே தேகம்
பூவாய் நீயும் பார்வை வீசு
அன்பே நீயும் கண்ணால் பேசு


கனியிதழ் முத்தாடுதே முத்தாடுதே ராகம்
பித்தானதே பித்தானதே தேகம்
பூவாய் நீயும் பார்வை வீசு
அன்பே நீயும் கண்ணால் பேசு

கனியிதழ் முத்தாடுதே முத்தாடுதே ராகம்

பாவை உன் மேனி காதல் வீணை
காளை என் கைகள் மீட்டும் வேளை

என்னென்ன ராகங்கள் நீ மீட்டுவாய்
அதில் என்னென்ன வண்ணங்கள் நீ காட்டுவாய்

ஏதேதோ ராகங்கள் நான் பாடலாம்
அது தாங்காமல் உன் மேனி போராடலாம்

சந்தோஷம் தாங்காமல் தள்ளாடும் நேரத்தில்
என் மேனி சாயாமல் நீ தாங்கலாம்
அன்பே...லால்ல லா லா லா


முத்தாடுதே முத்தாடுதே ராகம்
பித்தானதே பித்தானதே தேகம்

தேகம் தண்ணீரில் நீந்தும் போது
நெஞ்சில் ஏதேதோ இன்பம் நூறு

மீன் போல நான் மாறி விளையாடவா
அலை நீர் போல உன்மீது நான் மோதவா

என் மேனி நோகாமல் விளையாடலாம்
இந்த இடையோடு தாளங்கள் நீ போடலாம்

தாளங்கள் நான் போட நாணங்கள் பறந்தோட
தேகங்கள் இளைப்பாற இடம் தேடலாம்
அமுதே...ராப்ப பா பா பா


முத்தாடுதே முத்தாடுதே ராகம்
பித்தானதே பித்தானதே தேகம்

பூவாய் நீயும் பார்வை வீசு
அன்பே நீயும் கண்ணால் பேசு

கனியிதழ் முத்தாடுதே முத்தாடுதே ராகம்
 
---------------------------------------------------------------------------------------------------------

பாடல்: கண்மணியே காதல் என்பது
திரைப்படம்: ஆறிலிருந்து அறுபது வரை
இசை: இளையராஜா

கண்மணியே காதல் என்பது
கற்பனையோ காவியமோ
கண் வரைந்த ஓவியமோ
எத்தனை எத்தனை இன்பங்கள்
நெஞ்சினில் பொங்குதம்மா
பல்சுவையும் சொல்லுதம்மா


கண்மணியே காதல் என்பது
கற்பனையோ காவியமோ
கண் வரைந்த ஓவியமோ
எத்தனை எத்தனை இன்பங்கள்
நெஞ்சினில் பொங்குதம்மா
பல்சுவையும் சொல்லுதம்மா


மேளம் முழங்கிட தோரணம் ஆடிட
காலமும் வந்ததம்மா நேரமும் வந்ததம்மா

பார்வையின் ஜாடையில் தோன்றிடும் ஆசையில்
பாடிடும் எண்ணங்களே இந்த பாவையின் உள்ளத்திலே

பூவிதழ் தேன் குலுங்க சிந்தும் புன்னகை நான் மயங்க
ஆயிரம் காலமும் நான் உந்தன் மார்பினில்
சாய்ந்திருப்பேன் வாழ்ந்திருப்பேன்


கண்மணியே காதல் என்பது
கற்பனையோ காவியமோ
கண் வரைந்த ஓவியமோ

எத்தனை எத்தனை இன்பங்கள்
நெஞ்சினில் பொங்குதம்மா
பல்சுவையும் சொல்லுதம்மா


பாலும் கசந்தது பஞ்சணை நொந்தது
காரணம் நீ அறிவாய் தேவையை நான் அறிவேன்

நாளொரு வேகமும் மோகமும் தாபமும்
வாலிபம் தந்த சுகம் இளம் வயதினில் வந்த சுகம்

தோள்களில் நீ அணைக்க வண்ணத்தாமரை நான் சிரிக்க
ஆயிரம் காலமும் நான் உந்தன் மார்பினில்
தோரணமாய் ஆடிடுவேன்


கண்மணியே காதல் என்பது
கற்பனையோ காவியமோ
கண் வரைந்த ஓவியமோ

எத்தனை எத்தனை இன்பங்கள்
நெஞ்சினில் பொங்குதம்மா
பல்சுவையும் சொல்லுதம்மா


கண்மணியே காதல் என்பது
கற்பனையோ காவியமோ
கண் வரைந்த ஓவியமோ

--------------------------------------------------------------------------------------------------------

 பாடல்: இரவுகளை பார்த்ததுண்டு

திரைப்படம்: பட்டிக்காட்டு பொன்னைய்யா
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்

இரவுகளை பார்த்ததுண்டு
உறவுகளை ஹா பார்த்ததில்லை
துடித்தேன் தவித்தேன்
உனைத்தான் நினைத்தேன்
சொல்லத்தான் வார்த்தை இல்லை


இரவுகளை பார்த்ததுண்டு ஹா
உறவுகளை பார்த்ததில்லை
துடித்தேன் தவித்தேன்
உனைத்தான் நினைத்தேன்
சொல்லத்தான் வார்த்தை இல்லை


நிலவும் சிரிக்கும் தென்றல் மிதக்கும்
தலையணை இருக்கும் தழுவிக்கொண்டிருப்பேன்
நிலவும் சிரிக்கும் தென்றல் மிதக்கும்
தலையணை இருக்கும் தழுவிக்கொண்டிருப்பேன்

தழுவிடும் சுகங்கள் இல்லையே என நான்
இரவினில் மெல்ல விழித்துக்கொண்டிருப்பேன்

ஆறாதோ...அறியாதோ...தீராதோ...தெரியாதோ

இரவுகளை பார்த்ததுண்டு
உறவுகளை பார்த்ததில்லை
துடித்தேன் தவித்தேன்
உனைத்தான் நினைத்தேன்

சொல்லத்தான் வார்த்தை இல்லை

செவ்விதழ் கிண்ணம் சிந்திடும் முத்தம் முத்தம்
அள்ளி இரைத்தால் என் பசி தீரும் தீரும்

உள்ளவை எல்லாம் உனக்கே சொந்தம்
அழைத்தால் வருவேன் ஆனந்த மஞ்சம்

ஆஹா ஹா...ஆஹா ஹா...லாலாலா...லாலாலா

இரவுகளை பார்த்ததுண்டு
உறவுகளை பார்த்ததில்லை
துடித்தேன் தவித்தேன்
உனைத்தான் நினைத்தேன்

சொல்லத்தான் வார்த்தை இல்லை

கண்படும் போது கதைகளை கேட்டேன்
கைபடும் போது கலைகளை பார்த்தேன்
கண்படும் போது கதைகளை கேட்டேன்
கைபடும் போது கலைகளை பார்த்தேன்
மனதிலிருந்து மடியில் விழுந்தால்
சுகமோ சுகமென சொர்க்கத்தை காண்பேன்
ஆறாதோ...அறிவேனே...தீராதோ...தெரிவேனே

இரவுகளை ஹா பார்த்ததுண்டு
உறவுகளை ஹா பார்த்ததில்லை
துடித்தேன் தவித்தேன்
உனைத்தான் நினைத்தேன்

சொல்லத்தான் வார்த்தை இல்லை
சொல்லத்தான் வார்த்தை இல்லை
சொல்லத்தான் வார்த்தை இல்லை

--------------------------------------------------------------------------------------------------------

பாடல்: ராஜா வந்தார் ராணி வந்தாள்
திரைப்படம்: ராஜாவுக்கேத்த ராணி
இசை: விஜயபாஸ்கர்

ராஜா வந்தார் ராணி வந்தாள் ராஜாங்கம் இல்லாமலே
அவர் ஆசை கொண்டார் நேசம் கொண்டார் ஊரார்க்கு சொல்லாமலே

விளங்குதடி தில்லாலே விளக்கம் சொன்னா நல்லால்லே
விளங்குதடி தில்லாலே விளக்கம் சொன்னா நல்லால்லே


ராஜா வந்தார் ராணி வந்தாள் ராஜாங்கம் இல்லாமலே
அவர் ஆசை கொண்டார் நேசம் கொண்டார் ஊரார்க்கு சொல்லாமலே


கட்டான முத்தான காண்ணாளனை
கண்டாலே யாவர்க்கும் ஆசை வரும்

மொட்டாகிப் பூவான கண்ணாட்டியின்
முந்தானை கண்டாலே காதல் வரும்

தொடங்கி வச்சா தங்கம்மா தொடர்ந்து வச்சான் சின்னய்யா
தொடங்கி வச்சா தங்கம்மா தொடர்ந்து வச்சான் சின்னய்யா

கண்ணம்மா சின்னம்மா கேட்டுக்க சேதி

அடடடா விளங்குதடி தில்லாலே விலக்கம் சொன்னா நல்லால்லே
விளங்குதடி தில்லாலே விலக்கம் சொன்னா நல்லால்லே

ராஜா வந்தார் ராணி வந்தாள் ராஜாங்கம் இல்லாமலே
அவர் ஆசை கொண்டார் நேசம் கொண்டார் ஊரார்க்கு சொல்லாமலே


அப்போது நடந்ததெல்லாம் விட்டுத்தள்ளடி
இப்போது மார்பில் எனை கட்டிக்கொள்ளடி

எப்போதும் இப்படியே ஒட்டி இருப்போம்
இன்று வந்த நம்பிக்கையை கட்டி வளர்ப்போம்

துடிக்கிறான்டி சின்னய்யா முடிக்கிறாடி தங்கம்மா
துடிக்கிறான்டி சின்னய்யா முடிக்கிறாடி தங்கம்மா
கண்ணம்மா சின்னம்மா கேட்டுக்க சேதி


விளங்குதடி தில்லாலே விலக்கம் சொன்னா நல்லால்லே
விளங்குதடி தில்லாலே விலக்கம் சொன்னா நல்லால்லே

ராஜா வந்தார் ராணி வந்தாள் ராஜாங்கம் இல்லாமலே
அவர் ஆசை கொண்டார் நேசம் கொண்டார் ஊரார்க்கு சொல்லாமலே

--------------------------------------------------------------------------------------------------------
பாடல்: பாரம்மா பாரு டோக்கியோ
திரைப்படம்: ராமன் பரசுராமன்
இசை: ஷங்கர் கணேஷ்

பாரம்மா பாரு டோக்கியோ
ஜூலியட் பின்னே ரோமியோ
பாரம்மா பாரு டோக்கியோ
ஜூலியட் பின்னே ரோமியோ
ஆனந்த லோகம் வேறேதுவாகும் பாடிவா
என்னென்ன இங்கே உள்ளது என்று தேடிவா


பாரம்மா பாரு டோக்கியோ
ஜூலியட் பின்னே ரோமியோ
பாரம்மா பாரு டோக்கியோ
ஜூலியட் பின்னே ரோமியோ
ஆனந்த லோகம் வேறேதுவாகும் பாடிவா
என்னென்ன இங்கே உள்ளது என்று தேடிவா


ஜப்பான் கவர்ந்திழுக்க பொன்மான் கலந்திருக்க
இளமை நடத்தட்டும் லீலை

மக்கள் உலாவரும் சொர்க்கம் இதோ என
மனதில் தோன்றிடும் வேளை

ஜப்பான் கவர்ந்திழுக்க பொன்மான் கலந்திருக்க
இளமை நடத்தட்டும் லீலை

மக்கள் உலாவரும் சொர்க்கம் இதோ என
மனதில் தோன்றிடும் வேளை

நானொரு பக்கம் நீயொரு பக்கம்
வேண்டிய மட்டும் பார்ப்போம்


பாரம்மா பாரு டோக்கியோ
ஜூலியட் பின்னே ரோமியோ
ஆனந்த லோகம் வேறேதுவாகும் பாடிவா
என்னென்ன இங்கே உள்ளது என்று தேடிவா

வண்ணம் நூறாயிரம் எண்ணம் ஓராயிரம்
இருவர் பார்வையில் உண்டு

கண்ணில் படாததும் கையில் வராததும்
கிடைக்கப் போவது இன்று

வண்ணம் நூறாயிரம் எண்ணம் ஓராயிரம்
இருவர் பார்வையில் உண்டு

கண்ணில் படாததும் கையில் வராததும்
கிடைக்கப் போவது இன்று

நாடுகள் தோறும் ஓடிய போதும்
காதலர் பாதை ஒன்று


பாரம்மா பாரு டோக்கியோ
ஜூலியட் பின்னே ரோமியோ
ஆனந்த லோகம் வேறேதுவாகும் பாடிவா
என்னென்ன இங்கே உள்ளது என்று தேடிவா
--------------------------------------------------------------------------------------------------------
பாடல்: கண்ணுக்குள்ளே என்னைக்கண்டேன்
திரைப்படம்: சொல்வதெல்லாம் உண்மை
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்?

கண்ணுக்குள்ளே என்னைக்கண்டேன்
கண்ணை மூடாதே
பப பப்பா
கையில் வந்து கட்டுப்பட்டு
முத்தத்தாலே மெட்டுக்கட்டு
இதழும் இதழும் கவிதை எழுதும்
கண்ணுக்குள்ளே என்னைக்கண்டேன்
கண்ணை மூடாதே
ரப பப்பா...பப பப்பா

தாகங்கள் முழுதும் தணியவில்லை
ஏன் உன்னை பருக முடியவில்லை

ஏன் என்று விடையும் தெரியவில்லை
வா கண்ணே பருவம் பெரிய தொல்லை

காதல் வெள்ளம் பருக பருக பெருகும் வழியும்
பாவை உள்ளம் தழுவும் பொழுதில் இளகும் உருகும்
காதல் வெள்ளம் பருக பருக பெருகும் வழியும்
பாவை உள்ளம் தழுவும் பொழுதில் இளகும் உருகும்
தேகம் எங்கும் தித்திக்கும்...ஹே ஹே ஹே

கண்ணுக்குள்ளே என்னைக்கண்டேன்
கண்ணை மூடாதே
பப பப்பா...ரப பப்பா

பூ ஒன்று புடவை அணிந்ததென்ன
நான் அள்ள அதுவும் கலைந்ததென்ன

என் மேனி இரவில் நனைந்ததென்ன
என் பெண்மை உறவில் மலர்ந்ததென்ன

காதல் தேவி இரவில் இணைவாள் மறுநாள் எழுவாள்
பகலில் கேட்டால் அருகில் வருவாள் உடனே மறைவாள்
காதல் தேவி இரவில் இணைவாள் மறுநாள் எழுவாள்
பகலில் கேட்டால் அருகில் வருவாள் உடனே மறைவாள்
மாலை வந்தால் மன்னிப்பாள்...ஹே

கண்ணுக்குள்ளே என்னைக்கண்டேன்
கண்ணை மூடாதே
ரப பப்பா
கையில் வந்து கட்டுப்பட்டு
முத்தத்தாலே மெட்டுக்கட்டு
இதழும் இதழும் கவிதை எழுதும்
---------------------------------------------------------------------------------------------------------

பாடல்: சிலு சிலு சிலு என
திரைப்படம்: ஊரைத் தெரிஞ்சிக்கிட்டேன்
இசை: இளையராஜா

சிலு சிலு சிலு என சிறு சிறு பனிவிழும் காலம்
துளி துளி பனித்துளி விழ விழ குளிர்வந்து கூடும்
சிலு சிலு சிலு என சிறு சிறு பனிவிழும் காலம்
துளி துளி பனித்துளி விழ விழ குளிர்வந்து கூடும்

போர்வை எந்தன் பார்வை உன்னை மூடும்
போதைகொண்ட கோதை உந்தன் தோள்மேல் ஆடும்
சிலு சிலு சிலு என சிறு சிறு பனிவிழும் காலம்
துளி துளி பனித்துளி விழ விழ குளிர்வந்து கூடும்

கனிகள் கிளைகளில் ஆடும்போது அணிலும் கடித்ததென்ன
அணிலும் கடித்திட வேண்டுமென்று கனியும் வெடிப்பதென்ன
இலைகளில் பனித்துளி விழுவது ஏனய்யா
இரவினில் கொதிப்புகள் அடங்கிடத்தான்
ஆயிரம் காரணம் நீயும் கூற...அனுபவம் தெரியுது

சிலு சிலு சிலு என சிறு சிறு பனிவிழும் காலம்
துளி துளி பனித்துளி விழ விழ குளிர்வந்து கூடும்

பகலும் இரவென தோன்றக்கூடும் தலைவி வருகையிலே
நிலவும் நெருப்பென மாறக்கூடும் தலைவன் பிரிவினிலே
எனக்கென திறந்தது மனம் எனும் மாளிகை
உனக்கது இனித்திடும் கலை அரங்கம்
காவியம் ஓவியம் நாளும் காண...அருகினில் அழைத்தது

சிலு சிலு சிலு என சிறு சிறு பனிவிழும் காலம்
துளி துளி பனித்துளி விழ விழ குளிர்வந்து கூடும்
போர்வை எந்தன் பார்வை உன்னை மூடும்
போதைகொண்ட கோதை எந்தன் தோள்மேல் ஆடும்
சிலு சிலு சிலு என சிறு சிறு பனிவிழும் காலம்
துளி துளி பனித்துளி விழ விழ குளிர்வந்து கூடும்

----------------------------------------------------------------------------------------------------------
 

No comments: